சென்னை :சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பல்வேறு அரிசியல் தலைவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளனர்.
மு.க ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,”மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த், விரைந்து நலம் பெற விழைகிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeஎடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeஉதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeசெல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், “உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த வலிமையான நபர்களில் திரு ரஜினிகாந்த் அவர்களும் ஒருவர். எவ்வளவு கடினமான நேரத்திலும் உறுதியாக இருந்து போராடுபவர். ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeஆளுநர் ரவி
ஆளுநர் ரவி தனது எக்ஸ் பக்கத்தில், “ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeஅண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில், “நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். பொதுமக்களின் பேரன்பை பெற்றிருக்கும் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று கலைப் பணிகளை தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeசீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் பக்கத்தில், “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் முழு உடல்நலம் பெற்று, மீண்டுவர என்னுடைய பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeஎல்.முருகன்
எல்.முருகன் X – தளத்தில், “தமிழ்த் திரைப்பட நடிகர், சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். அண்ணன் திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node