நடிகை கௌதமி, தடா பெரியமசாமிக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு!!

சமீபத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு கொள்கை பரப்பு துணை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Actress Gowthami - Thada Periyamasami

சென்னை :நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் நடிகை கௌதமி. அதன்பிறகு, அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்து பல பொறுப்புகள் ஏற்று பல பணிகளை செய்து வந்தார்.

அதன் பின், பாஜகவுடன் சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகுவதாக அவர்  அறிவித்தார். இதன் பிறகு, அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நடிகை கௌதமிக்கு, அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பும், தடா பெரியசாமிக்கு எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக விளங்கும் கொள்கை பரப்பு செயலாளர் என்ற பொறுப்பின் துணை செயலாளர் பொறுப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதே போல, பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்திருந்த தடா பெரியசாமிக்கும் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

unknown node