“அதிமுக உடன்பிறப்புகளே…இவர்களுடன் தொடர்பு வைத்து கொள்ளாதீர்கள்” – ஓபிஎஸ்,இபிஎஸ் முக்கிய அறிவிப்பு!

சென்னை:அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கீழ்க்கண்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி தெற்கு (கிழக்கு) ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் மற்றும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஆகியோருடன் அதிமுகவினர் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக,இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:
“கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
- திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்ததிரு. R. அருண்பிரசாத்,(பொள்ளாச்சி தெற்கு (கிழக்கு) ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர்).
- விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. R.K. விஜயநல்லதம்பி,(வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் )
ஆகிய இருவரும் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் .
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளனர்.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/0CbMZ4VXJL
— AIADMK (@AIADMKOfficial) November 14, 2021