கோவை : தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அதிமுக வேட்பாளர் தோல்வியை உணர்ந்ததால் தவறான தகவல்களை வழங்கி வருவதாக குற்றம் சாட்டினார்.கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்,“கோவையில் இருக்கக்கூடிய பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மிக எழுச்சியோடு நாங்கள் வாக்காளரை சந்திக்கின்றபொழுது எங்களுடைய மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அந்தந்த தொகுதியின் மக்கள் மிக உற்சாகமான ஒரு வரவேற்பை கொடுத்து எங்கள் வாக்கு உதய சூரியனுக்கு கைச் சின்னத்திற்கு என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
எனவே கோவை இருக்கக்கூடிய பத்து தொகுதிகளிலும் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு நாங்கள் தேர்தல் களத்தில் பணியாற்றியிருக்கிறோம். நிச்சயம் வாக்காளர் பெருமக்கள் எங்களுக்கு வெற்றியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.நாங்க எப்பயுமே தேர்தலை சுமூகமா நடத்துறதுதான் எங்களுடைய விருப்பம். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. தேர்தலினுடைய தோல்விப் பயத்தில் அதிமுகவினர் அங்கங்க வந்து வன்முறைகளைத் தூண்ட வேண்டும்.
ஒரு சட்டம் ஒழுங்கு சீராக இருக்கக்கூடாது என்பதில் சிறப்பு கவனங்களை செலுத்தி ஐம்பது பேர் நூறு பேர் ஒரு அடியாட்களை ஒன்று திரட்டி அவர்களுடைய கட்சிக்காரர்களாகக் கூட இருக்கலாம். அவர்களை வன்முறையில் இறக்குவது.நான் கேட்கிறேன் ஒரு தேர்தல் நேரம் வந்து நாளை இன்னைக்கு ஆறு மணியோடு முடியுது. ஆறு மணிக்குப் பிறகு வெளியூர்க்காரர்கள் தங்கி இருக்கக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தினுடைய விதிமுறை. ஆறு மணிக்குப் பிறகு அவர்கள் சொல்லுகின்ற அல்லது முன்மொழியக்கூடிய கருத்துகள் வெளியூர்க்காரங்கள் தங்கி இருக்காங்கன்னு சொன்னா ஓகே.
இப்ப தேர்தல் நடைமுறையில் இருக்கின்றபொழுது, வாக்குகளைச் சேகரிக்கின்றபொழுது ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அவரவர் விருப்பப்பட்டவர்கள் அவரவர் தொகுதியில் சென்று வேலை பார்ப்பது இயற்கை.ஆனா ஆறு மணிக்கு மேல் அதுபோன்று யாரேனும் தங்கி இருந்தால் அது குறித்து குறைகளை சொல்லலாம். அதை விட்டுவிட்டு வெளியூர்க்காரர்கள் இங்க இருந்து பணியாற்றுகிறார்கள் என்பது என்னைப் பொறுத்தவரை அது ஏற்புடையதல்ல.உதாரணத்துக்கு நான் ஹால்மார்க் பத்தி சொல்றேன்.
உண்மையாலுமே ஒரு வேட்பாளர் ஒரு தரமான வேட்பாளராக இருந்தால், நன்கு அறிந்தவராக இருந்தால் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பாக அதனுடைய உண்மை தன்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஹால்மார்க் என்கிற ஒன்றிய அரசின் நிறுவனம் அவங்க கொடுக்கக்கூடிய அனுமதி. அதை எப்படி வந்து நான் ஒரு மாநில அரசைக் கொண்டு நான் எப்படி வந்து அத தடுக்க முடியும்?தோல்வி என்பது தெரிந்து போச்சு. அதனால இது போன்ற கருத்துக்களை முன்வைக்கின்றார்.
எங்களைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை பொறுத்தவரை கோவை மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் தேர்தலை சுமூகமாக அமைதியாக நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். அதுதான் எங்க தலைவர் எங்களுக்கு இட்டிருக்கின்ற கட்டளை” என்றார்.
செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சு, கோவை தெற்கு தொகுதியில் திமுகவுக்கு ஆதரவான சூழலை வலுப்படுத்தியுள்ளது. அதிமுக வேட்பாளர் தோல்வியை முன்கூட்டியே உணர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.தேர்தல் நெருங்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணியின் வெற்றி நம்பிக்கை அதிகரித்துள்ளது.
