சென்னை :நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து த.வெ.க மற்றும் ஜிஎஸ்டி குறித்து பல விஷயங்களை பேசினார். செய்தியாளர் ஒருவர் விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் உங்களை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இதை பார்த்தால் உங்களுக்கு என்ன தோணுகிறது? என கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த சீமான் ” அவர்கள் விமர்சனம் செய்வதை பார்த்து ரசித்து சிரிக்கவேண்டும்.
சின்னப்பிள்ளைங்க பக்குவப்பட வேண்டும். பொதுவெளியில் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துதான் ஆக வேண்டும். விமர்சனங்களை தாண்டி தான் இங்கே நின்று கொண்டு இருக்கிறோம். என்னுடைய தம்பி விஜயிடம் நான் கேட்கிறேன் பாஜக உங்கள் கொள்கை எதிரி திமுக என் அரசியல் எதிரி என்று சொல்கிறார். இது இரண்டுக்கும் வேறுபாடு என்ன என்று கேட்டால் அதை சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு விமரிக்கிறீங்க என்று சொல்லக்கூடாது வாத்தியார் ஒரு கேள்விகேட்டால் அதற்கு பதில் சொல்லவேண்டும்.
பாஜக உங்கள் கொள்கை எதிரி என்றால் 24 தேர்தலில் போட்டியிட்டிட்டு அதனை வீழ்த்த வராதது ஏன்? அதைப்போல பாஜக எதிரி என்றால் காங்கிரஸ் உங்களுடைய நண்பனா? பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டுக்கும் இடையே ஒரே ஒரு கொள்கை வேறுபாடு மட்டும் காட்டுங்க..இது விஜய்க்கு மட்டுமில்லை என்னை விமர்சனம் செய்யும் தம்பி தங்கைகளிடமும் கேட்டிறேன். கட்சிக்கு பெயர் மட்டும் தான் வேற..திரும்ப திரும்ப சொல்றேன் கொடியில் வண்ணம் மாறும் கொள்கையில் எண்ணம் மாறாது” எனவும் சீமான் தெரிவித்தார்.
மேலும தொடர்ந்து பேசிய அவர் ” நான் விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது ஒரு அண்ணனாக தம்பிக்கு அறிவுரைகளை சொல்கிறேன். இப்போது சரி செய்து கொள்ளவில்லை என்றால் வேறு அரசியல் கட்சிகள் எடுத்துச்சொல்லுவார்கள்” எனவும் சீமான் தெரிவித்தார்.
