கைது செய்யப்பட்ட எம்.பி கனிமொழி விடுதலை..!

ஹத்ராஸ் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக மகளிர் அணியினர் சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். காவல்துறை தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றதாக கூறி திமுக எம்.பி. கனிமொழி மற்றும் திமுக மகளிரணியினரை காவல்துறை கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட திமுக கனிமொழி விடுதலை செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து, திமுக மகளிரணியினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.