அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து முற்றிலும் ஒழிக்கப்பட்டது – முதல்வர் எடப்பாடி

this news gives information about At the time of the ADMK regime was completely destroyed - Chief Minister -ADMK atchiil than

தி.மு.க கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி தேர்தல் நேரத்தில் தி.மு.க பொய்யான அறிக்கைகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதாக முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.

அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில்  அ.தி.மு.க  கூட்டணிக் கட்சிகளுக்காக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கள்ளக்குறிச்சி வேட்பாளர் எல் கே சுதீஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இதை தொடர்ந்து இன்று வேலூர் ஜோலார்பேட்டையில், திருவண்ணாமலை மக்களவை தொகுதி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்.

பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது,எனவும் வாக்குகளை பெற  தி.மு.க நாடகமாடுகிறது.

மேலும்  தி.மு.க கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி தேர்தல் நேரத்தில் தி.மு.க பொய்யான அறிக்கைகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதாக முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.