பாஜக, அதிமுக அரசுகள் மக்களை ஏமாற்றுகின்றன-மு.க.ஸ்டாலின்

பாஜக, அதிமுக அரசுகள் மக்களை ஏமாற்றுகின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜக, அதிமுக அரசுகள் மக்களை ஏமாற்றுகின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பாஜக, அதிமுக ஆட்சிகளில் வரலாறு காணாத அளவிற்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் நலனில் எந்தவித அக்கறையும் காட்டாத அரசுகளை அகற்ற வேண்டும்.பாஜக, அதிமுக அரசுகள் மக்களை ஏமாற்றுகின்றன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை 6.1% உயர்ந்து விட்டது. இளைஞர்கள் நலனில் அக்கறை காட்டாத அரசுகளை தூக்கி எறியுங்கள்.2வது முதலீட்டாளர் மாநாடு என்று மீண்டும் ஒரு கானல் நீர் மாநாடு நடத்தி அதிமுக அரசு ஏமாற்றியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.