ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் ! மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் எழுந்துள்ளதை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

MK Stalin - Rahul Gandhi [

சென்னை: இந்திரா காந்தி போலவே ராகுல் காந்தியும் கொல்லப்படுவார் என்று பா.ஜ.க.வினர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயக நாட்டில் மிரட்டல், வன்முறைக்கு இடமில்லை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியும் இருக்கிறார்.

சமீபத்தில், எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை குறித்து, பாஜக தலைவர் ஒருவர்,” அவரது பாட்டிக்கு நேர்ந்த கதி தான் அவருக்கும் நேரும் எனவும் அவரது நாக்கை வெட்டுபவர்களுக்கு 11 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இது போன்ற பேச்சுக்கள் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கொலை மிரட்டல்களுக்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “பாஜக தலைவர் ஒருவர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ராகுல் காந்தியின் பாட்டிக்கு நேர்ந்த கதி தான் அவருக்கும் நேரும் என்று கூறியுள்ளார். ஷிண்டே சேனா எம்.எல்.ஏ ராகுல் காந்தியின் நாக்கை வெட்டுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

எனது சகோதரர் ராகுல் காந்தியின் ஈர்ப்பும், பெருகி வரும் மக்கள் ஆதரவும் பலரை நிலைகுலையச் செய்துள்ளது, இது போன்ற மோசமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும். மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்”, என முக.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

unknown node