பாஜக ஆபத்தான கட்சியா ...!நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு தகவல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர்.கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன்.ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் பற்றி தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன். பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே.பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யட்டும்.நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை, முழுமையாக இறங்கியதும் முழு பதில் சொல்வேன். அமைச்சர்கள் நாகரீகமாக கருத்து தெரிவிப்பது நல்லது.இலவசங்கள் 100 சதவீதம் தேவை, அது ஓட்டுக்காக இருக்க கூடாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.