வெற்று அறிக்கை நாயகன் பட்டத்தை உறுதி செய்த கனிமொழிக்கு நன்றி – அதிமுக கழகம்

The AIADMK has responded to Kanimozhi by thanking Chief Minister Palanisamy for trying to do everything MK Stalin says.

மு.க.ஸ்டாலின் சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி என கூறிய கனிமொழிக்கு, பதில் கருத்து தெரிவித்துள்ளது அதிமுக.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை விமர்சிக்கும் வகையில், திமுக எம்பி கனிமொழி, அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி தளபதி முக ஸ்டாலின் சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி என்றும் வாழ்த்துக்கள் எனவும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் கருத்து தெரிவிக்கும் வகையில், அதிமுக கழகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள். ஆனால், செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம். மேலும், பின்குறிப்பு என்று கூறி, வெற்று அறிக்கை நாயகன் முக ஸ்டாலின் என்ற பட்டத்தை உறுதி செய்த கனிமொழி எம்பி அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளது.

unknown node