#BREAKING: தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை!

Anti-corruption officials re-search places owned by AIADMK ex-minister Thangamani

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல் கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 10, ஈரோடு மாவட்டத்தில் 3 மற்றும் சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்தில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கடந்த டிச. 15-ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான சுமார் 69 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கணக்கில் வராத சுமார் 2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்த நிலையில், இன்று மீண்டும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.