#BREAKING: தேர்வை ரத்து செய்யக்கோரும் விசாரணை மீண்டும் தொடக்கம்.!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரும் வழக்கில் விசாரணை மீண்டும் தொடங்கியது.
பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த, வழக்கை இன்று காலை விசாரித்த சென்னை நீதிமன்றம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்..? தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு..? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலை மாதத்தில் ஏன் நடத்தக்கூடாது என்றும் கேள்வி எழுப்பிய நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இதையெடுத்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரும் வழக்கில் விசாரணை மீண்டும் தொடங்கியது. உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025