#BREAKING : கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை...!

At the artist memorial at Chennai Marina Beach, celebrities like Chief Minister MK Stalin and ministers are paying their respects.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பிரபலங்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் இன்று துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், கலைஞரின் நினைவிடம் ‘போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்’ என அலங்கரிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பிரபலங்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.