மக்கள் விருப்ப முதலமைச்சர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய தவெக தலைவர் விஜய்! முதலிடத்தில் யார் தெரியுமா?
சி வோட்டர்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் மக்களின் விருப்ப முதலமைச்சர்கள் சர்வேயில் முதலிடத்தில் மு.க.ஸ்டாலின், 2ஆம் இடத்தில் விஜய், 3ஆம் இடத்தில் இபிஎஸ் , 4ஆம் இடத்தில் அண்ணாமலை உள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழ தொடங்கிவிட்டது. அதற்கு ஏற்றாற்போல அரசியல் களமும் தற்போதே அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
வருகின்ற தேர்தல் வழக்கமாக இருக்கும் ஆளும் கட்சி (திமுக) மற்றும் எதிர்க்கட்சி (அதிமுக) என்று மட்டும் இருக்காது. குறிப்பாக கடந்த காலங்கள் போல மெஜாரிட்டி ஆட்சி இருக்காது. 2026-ல் நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது களத்தில் புதியவர்களின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இந்த முறை இளைஞர்களின் அரசியல் தாக்கம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கணிக்கப்படுகிறது.
அதனை வெளிப்படுத்தும் விதமாக அண்மையில் சி வோட்டர்ஸ் (C Voters) மற்றும் இந்தியா டுடே தனியார் செய்தி நிறுவனம் சர்வே ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முதலமைச்சர் பதவிக்கு மக்களின் விருப்பம் குறித்த சர்வே நடத்தப்பட்டது. அதில் பல்வேறு பிரிவுகளில் கேள்வி கேட்கப்பட்டும் இருந்தது.
மக்கள் விருப்ப முதலமைச்சர் :
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
- தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் 18 சதவீத மக்கள் ஆதரவுடன் 2ஆம் இடத்தில் உள்ளார்.
- எதிர்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி 10 சதவீத வாக்குகளை பெற்று 3ஆம் இடம் பிடித்துள்ளார்.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 4வது இடத்தில் உள்ளார். அவருக்கு 9 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
அரசாங்க செயல்பாடு
- மிகவும் திருப்தி – 15 சதவீதம் ,
- ஓரளவுக்கு திருப்தி – 36 சதவீதம்,
- திருப்தி அடையவில்லை – 25 சதவீதம் ,
- முடிவு எடுக்க விரும்பவில்லை – 24 சதவீதம்.
முதலமைச்சரின் செயல்பாடுகள் :
- மிகவும் திருப்தி – 22 சதவீதம் ,
- ஓரளவுக்கு திருப்தி – 33 சதவீதம்,
- திருப்தி அடையவில்லை – 22 சதவீதம் ,
- முடிவு எடுக்க விரும்பவில்லை – 23 சதவீதம்.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மக்கள் மிகவும் விரும்பப்படும் தலைவராக முதல் இடத்தில் இருந்தாலும், அவரது ஆட்சியில் பொதுமக்களின் கருத்துக்கள் கலவையாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இபிஎஸ்-ன் செயல்பாடுகள் :
- மிகவும் திருப்தி – 8 சதவீதம் ,
- ஓரளவுக்கு திருப்தி – 27 சதவீதம்,
- திருப்தி அடையவில்லை – 32 சதவீதம் ,
- முடிவு எடுக்க விரும்பவில்லை – 33 சதவீதம்.
மக்களின் முக்கிய பிரச்சனை :
- பெண்கள் பாதுகாப்பு – 15 சதவீதம் ,
- விலைவாசி உயர்வு – 12 சதவீதம்,
- போதைப்பொருள் – 10 சதவீதம்,
- வேலைவாய்ப்பின்மை – 8 சதவீதம்.
எம்எல்ஏ-க்களின் செயல்திறன் :
- மிகவும் திருப்தி – 16 சதவீதம் ,
- ஓரளவுக்கு திருப்தி – 32 சதவீதம்,
- திருப்தி அடையவில்லை – 25 சதவீதம் ,
- முடிவு எடுக்க விரும்பவில்லை – 27 சதவீதம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025