சென்னை :தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி காரணமாக, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அடுத்த 2 தினங்களில் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கணிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node