தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை  தேர்தல்!!அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை !!

This news gives information about Chief Electoral Officer advised all Lok Sabha election on April 18

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று மாலை  காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

unknown node

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று மாலை 4 மணி முதல் 6 மணிவரை காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.