முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேனர்கள் கிழிப்பு ...!டிடிவி.தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு ...!

முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக டிடிவி.தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாகடிடிவி.தினகரன்உள்ளிட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை அன்று அவரது  சிலைக்கு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்  ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர், துணை  முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேனர்கள் அனைத்தும் கிழித்து எறியப்பட்டது.

unknown node

இந்நிலையில்  ராமநாதபுரம் பசும்பொன்னில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாகடிடிவி.தினகரன்உள்ளிட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பேனர்கள்கிழித்ததாக தினகரன் கட்சியினர் மீது கமுதி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அதேபோல்  பேனர்விவகாரத்தில் அமமுக கமுதி வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் மாரிமுத்து உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.