ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை. முதலமைச்சர் பழனிச்சாமி மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் யார் அந்த அதிகாரத்தில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்த வேண்டும். வைரமுத்து மீது சின்மயி கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.