இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவருக்கு விருது வழங்கினார் தமிழக முதல்வர்!

கடந்த மூன்று வருடங்களாக அறிவியல் துறையில் நன்கு செயல்பட்டு வருபவர்களுக்கு அப்துல்கலாம் விருது சுதந்திர தினத்தன்று  தமிழக முதல்வர் வழங்குவது வழக்கம்.

கடந்த மூன்று வருடங்களாக அறிவியல் துறையில் நன்கு செயல்பட்டு வருபவர்களுக்கு அப்துல்கலாம் விருது சுதந்திர தினத்தன்று  தமிழக முதல்வர் வழங்குவது வழக்கம்.

unknown node

அந்த வகையில் இந்தாண்டு அப்துல்கலாம் விருது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சுதந்திர தினத்தன்று அவரால் வர முடியாத காரணத்தால் இன்று அவருக்கு விருது வழங்கப்பட்டது.

இன்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து இந்த வருடத்திற்கான அப்துல்கலாம் விருதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் பெற்றுக்கொண்டார்.