முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சண்முகம் சுப்பிரமணியன்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கபட்டது. ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு சுமார் 2 கிமீ தூரம் இருக்கும்போது அதனுடடான தகவல் துண்டிக்கப்பட்டது.
விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை அமெரிக்காவில் நாசா நிறுவனம் அனுப்பிய செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு காரணம் சண்முக சுப்பிரமணியன் என்ற தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் நாசா புகைப்படங்களை ஆராய்ந்து விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டறிந்து, நெசவுக்கு அனுப்பிய மெயில் மூலமாக லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்ட்டது.
இதற்கும் பலரும் பாராட்டிய நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்தார். மேலும், சண்முக சுப்பிரமணியன் , முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்வர் சண்முகம் சுப்ரமணியனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025