12 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.., புகார் தெரிவிக்க உதவி எண்கள் இதோ.!
தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவிக்க 9498383075, 9498383076 ஆகிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 5ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர்களின் எழுதுகின்றனர். இந்த பொதுத்தேர்வு மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,518 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மொத்தமுள்ள 8,21,057 மாணவ மாணவியர்களில் 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகளும் சிறைவாசிகள் 145 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 3,316 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு..,
- காலை 10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்படும். அதனை நிரப்ப 5 நிமிடங்கள் வழங்கப்படும். அதற்கு பிறகு கேள்வித்தாள் வழங்கப்படும்.
- வினாத்தாள் படித்து பார்க்க 10 நிமிடங்கள் வழங்கப்படும்.
- தேர்வு 10.15க்கு ஆரம்பமாகும். மொத்தம் 3 மணிநேரம் தேர்வு நடைபெறும். மதியம் 1.15 மணிக்கு தேர்வு நிறைவடையும்.
- தேர்வு குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் புகார் தெரிவிக்க அரசு தேர்வுகள் இயக்கத்தில் முழுநேர தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை தேர்வு நாளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படும்.
- புகார்கள் தெரிவிக்க 9498383075 மற்றும் 9498383076 ஆகிய புகார் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025