கொரோனா குறைந்தால் மட்டுமே கார்த்திகை தீபத்தின் போது பக்தகர்களுக்கு அனுமதி – அமைச்சர் சேகர்பாபு

Minister Sekar Babu explains that devotees will be allowed in Thiruvannamalai during the fire.

தீபத்தின் போது திருவண்ணாமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 7ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்று முழுவதும் குறைந்தால் மட்டுமே கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து அனைத்து விதமான சூழல்களையும் ஆராய்ந்து முதலமைச்சரின் அனுமதியோடு முடிவெடுக்கப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.