எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி 9 ஆம் தேதி அன்று காலை 10:30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Edappadi K Palaniswami

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி 9 ஆம் தேதி அன்று காலை 10:30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், கட்சி உறுப்பினர்களை தயார்படுத்துதல், புதிய வாக்காளர்களை ஈர்ப்பது, சமூக வலைதளங்களில் செயல்பாடுகளை மேம்படுத்துதல் என பல்வேறு விஷயங்கள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது.

தரக்குறைவான விமர்சனம் வேண்டாம்! உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் – இபிஎஸ்

இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சமூக வலைத்தளங்களில் செயல்படும் அதிமுகவினர் தரைக்குறைவாக விமர்சனம் செய்ய வேண்டாம்.  அதிமுக ஐடி விங் எனது நேரடி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றார்.