தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வருடா வருடம் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்து வருகிறது.அதேபோல் இந்த ஆண்டிற்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு மொத்தம் 20% போனஸ் வழங்கப்படும் .அதில் 8.33 % போனஸ் மற்றும் 11.67 % கருணைத்தொகை வழங்கப்படும்.
unknown nodeஅதேபோல் நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மொத்தம் 10% போனஸ் வழங்கப்படும்.அதில் போனஸ் 8.33 % மற்றும் 1.67 % கருணைத்தொகை வழங்கப்படும்.முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை:
unknown nodeunknown nodeநிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.8,400 போனஸ் வழங்கப்படும்.அதேபோல் அதிகபட்சமாக ரூ.16,800 போனஸ் கிடைக்கும்.3 லட்சத்து 58 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ 486.96 கோடி போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.