புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நெல் ஜெயராமனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
உடல் நல குறைவு காரணமாக நெல் ஜெயராமன் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இவருக்கு திரைப்பட நடிகர்களான சிவகார்த்திக்கேயன் மற்றும் கார்த்திக் ஆகியோர் உதவி செய்தனர். இதன் பின் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ‘நெல்’ ஜெயராமனை சந்தித்து நலம் விசாரித்ததாகவும், அவருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
unknown nodeஇதன் பின் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதியை உடனடியாக வழங்க வேளாண்துறைக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நெல் ஜெயராமனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவருக்கு ரூ. 1 லட்சம் நிதியும் வழங்கினார் .