"ஊழலில் கொழுத்த அதிமுக"போராட்டம் நகைச்சுவை,துணிவிருந்தால் வழக்கு போடுங்கள்"ஸ்டாலின் சவால்..!!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதிமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதிமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

unknown node

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் அதிமுக அரசை கண்டித்து பதிவிட்டுள்ளார் அதில் ஊழலில் கொழுத்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் தி.மு.க வுக்கு எதிராக போராட்டம் நடத்தி நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

unknown node

ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரைச் சந்திக்க வைத்ததே உங்கள் எஜமானர் கட்சி தானே, அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?வரலாற்றில் எதிர்க்கட்சியை பார்த்து அஞ்சி நடுங்கி போராட்டம் நடத்தும் ஒரே கட்சி துரோகமும், ஊழலும் கொண்ட அதிமுக மட்டுமே!

unknown node

இதுவரை ஒரு குற்றத்தை எங்கள் மீது சுமத்தி உங்களால் நிரூபிக்க முடிந்ததா? இனியும், எங்கள் மீது குற்றம் சுமத்த துணிவிருந்தால் வழக்கு போடுங்கள் என்று ஆளும் அதிமுக அரசை சாடியுள்ளார்.

DINASUVADU