சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் விஜய், நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
விஜய் பேசியதாவது“மிக மிக மிக முக்கியமான ஒரு நேரத்துல நாம இருக்கிறோம். முக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்போற. அந்தத் தேர்தலோட கடைசி பிரசாரம். எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். பொய் பொய்யா சொல்லி மக்களை ஏமாத்திக்கிட்டு அவரோட life மட்டும் நல்லா உயர்த்திக்கிட்டாரு. ஆனா மக்களோட life அவர் எப்படி உயர்த்தினா தெரியுமா? வீட்டு வரியை உயர்த்திட்டாரு. தண்ணி வரியை உயர்த்திட்டாரு. தொழில் வரியை உயர்த்திட்டாரு. விலைவாசியை உயர்த்திட்டாரு. குப்பைக்குக் கூட வரி போட்டாரு. இப்படி மக்களோட கஷ்டங்களை மட்டுமே அவரு உயர்த்தி வச்சிருக்கிறார்.
இன்னும் ஒரு படி மேல போய் இன்னும் பல படி மேல போய் தமிழ்நாட்டுல இதுவரைக்கும் எந்த government வாங்காத அளவுக்குக் கடன். அவ்வளவு கடனை வாங்கி வச்சிக்கிட்டு அந்தக் கடன் சுமையையும் உயர்த்தி வச்சிருக்கிறார். எவ்ளோ? அஞ்சாறு லட்சம் கோடி.தோத்துட்டு அந்த after elections அந்த effect என்னவா இருக்கும்னு இப்பவே சொல்றேன். கட்சியை காப்பாத்திக்கனும் இல்ல. ஏகப்பட்ட case எல்லாம் இருக்கு இல்ல. லஞ்ச case, ஊழல் case, திருட்டு case. அவங்க குடும்பத்து மேல, ministers மேல எல்லாத்தையும் காப்பாத்திக்கனும் இல்ல. போயி மோடி அவர்கள் கால்ல, அமித்ஷா அவர்கள் கால்ல திமுக விழுதா இல்லையான்னு பாருங்க.
அன்னைக்கு தெரியும் மக்களே!சிறுபான்மை சகோதரர்களே! அன்னைக்கு தெரியும் இந்த திமுகவோட மொத்த சாயும் வெளிக்கப்போகுது. அது மட்டுமா? பாஜகவோட முதல் அடிமை யாருன்னு போட்டி வேற. நீயா? நானா? நானா? நீயா? யாருக்கு யாருக்கும்? இந்த திமுகவுக்கும் மற்றும் பலருக்கும்.அதனால சிறுபான்மை சகோதரர்களோட இந்த விஜய் கூடவே நிப்பான் நிப்பான் நிப்பான். அதுல எந்த மாற்றுக் கருத்துமே கிடையாது.இப்ப recently நிறைய comedy எல்லாம் நடக்குது இல்ல. ஸ்டாலின் சாரும் மற்றும் பலரும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு இந்த கருத்து கணிப்பு, கருத்து கணிப்பு என்ற பேர்ல நிறைய இந்தக் கடுப்புல விட்ட கணிப்பு எல்லாம் விட்டுட்டு இருக்காங்க.
அதுல திமுக முந்நூறு seat ஜெயிக்குமா மற்றும் பலர் எழுநூறு seat ஜெயிக்குமா? யோவ் எங்கயா இருக்கு இத்தனை seat? குடுத்தா மேட்டுக்கு சும்மா அடிச்சு உட்றது. ஒரு தில்லமுல்லுக்கு ஒரு அளவே இல்ல.நாற்பது வயசுக்குள்ள இருக்கிறவங்க மட்டும்தான் விஜய்க்கு vote போடுவாங்களாம். அம்பது வயசுக்குள்ள இருக்கிறவங்க மட்டும்தான் இந்த விஜய்க்கு போனா போதும்னு vote போடுவாங்களாம். இந்த நாற்பது வயசுக்குள்ள இருக்கிறாங்களா இந்த voters அவங்க எல்லாம் ரொம்ப கம்மியா? ஆனா இந்த அம்பதுல இருந்து என்பது வயசு வரைக்கும் இருக்கிறாங்களே. அந்த voters ரொம்ப ஜாஸ்தியா. ஆனா அவங்க யாரும் விஜய்க்கு vote போட மாட்டாங்களா?இப்படி build up மேல build up ஓங்கி மண்டைல நறுக்குனு குத்துற மாதிரி. நம்ம election commission ஒரு detailed report ஒன்னு வெளியிட்டிருக்காங்க.
அதுல நாற்பது வயசுக்குள்ள இருக்கிற அந்த voters இரண்டு கோடியே முப்பத்தி ஏழு லட்ச சொச்சமா? அதுல அம்பது வயசுக்குள்ள இருக்கிறவங்களையும் உள்ள சேர்த்துக்கிட்டீங்கன்னா மூணு கோடியே அறுபத்தஞ்சு லட்சம் சொச்சமா? அந்த மூணு கோடியே அறுபத்தஞ்சு லட்சம் சொச்சத்துல அம்பது வயசுக்குள்ள இருக்கிற நம்மளோட அக்கா தங்கச்சிங்க மட்டும் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே எழுபத்தி ஏழு லட்சம் சொச்சமா? எங்கடா போனீங்க? கடுப்புல விட்ட கணிப்பாளர்கள் எங்க போனீங்க?சும்மா டர்ஹனா டருதா? இந்த கடுப்புல விட்ட கணிப்பாளர்களுக்கு ஒரே ஒரு கேள்வி.
இந்த அறுபது வயசு மேல இருக்கிறவங்க இந்த எழுபது, எண்பது வயசு வயசுல இருக்கிற என்னுடைய அம்மா, பாட்டி, அப்பா, தாத்தா இவங்க எல்லாரும் நம்ம வீட்டு புள்ள விஜய் நம்ம வீட்டு புள்ள விஜி அப்படின்னு சொல்றதெல்லாம் உங்க காதுல விழலையோ?இந்த உண்மையெல்லாம் வெளியில சொல்லிராதேன்னு ரெண்டு பேரும் நல்லா கவனிச்சு அமச்சாங்களோ? அதனால இந்தக் கருத்து கணிப்பு, கடுப்புல விட்ட கணிப்பு, என்ன கணிப்பு என்ன விட்டாலும் திமுகவும் மற்றும் பலரும் மண்ணை மண்ணாகக் கவ்வப்போறது உறுதி.
அவங்களோட இந்த ஆட்சி கனவு, லஞ்ச கனவு, ஊழல் கனவு, கொள்ளையடிக்கிற கனவு எல்லாம் கதம் கதம் தான்.இப்ப recently பாண்டிச்சேரி election ல அந்த election day ல கிட்டத்தட்ட ninety percent மேல polling ஆயிருக்கு. விட்டா hundred percent ஆயிருக்கும் போல இருக்கு. அதே மாதிரி polling நம்ம தமிழ்நாட்டுல நடக்குதா இல்லையானு பாருங்க.அதனால மக்களே! உங்களை எல்லாம் கையெடுத்து கும்பிட்டு கேக்குறேன். booth க்கு போயி ஸ்டாலின் சார் கிட்ட இருந்து நம்ம தமிழ்நாட்டை காப்பாத்தியே ஆகணும்.
நம்ம ஜனநாயகத்தை காப்பாத்தி ஆகணும். என்ன busy இருந்தாலும், என்ன வேலையா இருந்தாலும், என்ன வெளியூர்ல இருந்தாலும் எந்த boothல உங்களோட vote இருக்கதோ அங்க வந்து தயவு செஞ்சு நம்முடைய விசல் சின்னத்துக்கு உங்க vote போடுங்க.தயவு செஞ்சு உங்க விஜய்க்கு ஒரு வாய்ப்பு குடுங்க. இந்த நேரத்துல வெளிநாட்டுல இருந்து பணம் செலவு பண்ணி flight ticket book பண்ணி இங்க வந்து vote போட வந்த நம்மளுடைய நண்பா நண்பிகள் உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்துல என்னுடைய நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.அடுத்து. அடுத்து ஏதாவது ஒரு பிரச்சனைனா விஜய் வெளியவே வரமாட்டாராம்.
இது யார் சொல்றா? இந்த மற்றும் பலர் கட்சியில ஒருத்தர் இருக்கார்ல. பத்து தடவை தோத்து போனாரு. இன்னமும் திருந்தாத ஒருத்தர். அவரு சொல்றாரு. ஐயா அனுபவசாலி அவர்களே! உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி ஒன்னு கேக்குறேன். இந்த சேலத்துக்கு பக்கத்துல இருக்குற அந்தத் தொகுதியில் மட்டுமே போய் பதுங்கிக்காம தமிழ்நாட்டுல வேற ஏதாவது ஒரு தொகுதியில் நின்னு உங்களால ஜெயிச்சு காட்ட முடியுமா? sorry sorry மொதல்ல நிக்க முடியுமா? மொதல்ல அதைச் செஞ்சிட்டு அப்புறமா இந்த விஜயை பத்தி பேசுங்க பாஸ்.சும்மா நச நசன்னு. சொந்த தொகுதியிலே தோத்துருவோம்னு பயந்துதான் நம்மளோட சின்னத்தையே திருடுனவர் தானே. அதனால தான் நம்மளோட மன்றத்துல பல வருஷமா பயணிச்ச நம்ம ஒரு சுயேட்சை வேட்பாளரோட சின்னத்தை நம்பளோடதான் அரவணைச்சு ஆதரிக்கிறோம்.
அதனால எடப்பாடி தொகுதி மக்களே! அந்த சுயேட்சை வேட்பாளரோட சின்னத்துல அந்த TV சின்னம். அந்த TV சின்னத்துல நீங்க ஓட்டு போடுறது நம்ம விசில் சின்னத்துக்கு நீங்க ஓட்டு போடுற மாதிரி. அதனால எடப்பாடி தொகுதி மக்களே! தயவு செஞ்சு அத மறந்துடாதீங்க.இந்த திமுகவுக்கும் மற்றும் பலருக்கும் ஒரு common owner ஒருத்தர் இருக்காருல. யாரு? பாஜக. அதுல ஒரு பாஜக மந்திரி ஒருத்தர் சொல்றாரு. விஜய். என்னப்பா விஜய். நடிகர் விஜய். நடிகர் விஜய். நடிகர் விஜய். ஆமா. நான் நடிகன் தான். இப்ப யாரும் இல்லன்னா. என்னமா இவரு என்னமோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி. ஆனா நான் அரசியலுக்கு வந்துட்டு நடிக்கல. அரசியல்ல நான் நடிக்கல. ஆனா நீங்க என்ன பண்றீங்க. அரசியல்ல இருந்துகிட்டு நாடகம் மேல நாடகம் போடுறீங்களே. அப்போ உங்க எல்லாரையும் நாடக நடிகர்கள் ன்னு சொல்லலாமா?
ஒன்றிய அரசோட power கைல வச்சிக்கிட்டு திமுகவோட ஒரு நாடகம் மற்றும் பலரோடு ஒரு நாடகம். அப்போ உங்கள எல்லாரையும் ஒரு dangerous ஆன நாடக company ன்னு சொல்லலாமா?இந்த பாஜகவோட surrender ஆகி இருக்கறதோட மட்டும் இல்லாம இந்த ஊழல்லேயே ஊறிப் போய் ஊறிப் போய் ஊறிப் போய் இருக்கிற இந்த ரெண்டு பேரும் நமக்கு வேணாங்க. புதுசா Fresh ஆ ஒரு நல்ல ஆட்சி கொடுக்கக்கூடிய, ஒரு மாற்றத்தை கொடுக்கக்கூடிய நம்மளோட TVK நாம எல்லாருமா சேர்ந்து கொண்டு வருவோம்.
நாம எல்லாருமா சேர்ந்து கொண்டாடுவோம்.இது ஒரு மாற்றத்திற்கான ஒரு தேர்தல். சும்மா மாத்தி மாத்தி ஓட்டு போட்டுக் கிறதுக்கு பேரு மாற்றம் கிடையாது. புதுசா Fresh ஆ ஒருத்தங்களை கொண்டு வர்றதுக்கு பேருதான் அந்த மாற்றம்.இந்த போகி பண்டிகை அன்னைக்கு வீட்டுல இருக்குற வீணா போனதை எல்லாம் தூக்கி வீசி எறிவோம் தெரியுமா? அந்த மாதிரி இந்தத் தேர்தல்ல எழுபத்தஞ்சு வருஷ பவள விழா பாப்பாவையும். அம்பத்தஞ்சு வருஷ பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி வீசி எறிவோமா? ஒரு new governance ஒரு good governance ஒன்ன கொண்டு வரலாமா?நீங்க இந்த திமுகவுக்கு ஓட்டு போடுறது மற்றும் பலருக்கு ஓட்டு போடுறது பாஜகவுக்கு ஓட்டு போடுறது. யாருக்கு ஓட்டு போட்டாலும் சுத்தி சுத்தி நீங்க பாஜகவுக்கு ஓட்டு போடுற மாதிரி தான்.
ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்கும் எதிரான ஓட்டு.நீங்க ஒன்னு கவனிச்சீங்களா? ஒட்டு மொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறாங்க. அதுக்கு என்ன காரணம்? ஏன் அப்படி எதிர்க்கணும்? இப்ப அவங்க அங்க ஒரு தனித்தனி கூட்டணியில் இருந்தாங்கன்னா அவங்களுக்கு opposite இருக்கறவங்களை எதிர்ப்பாங்க. ஆனா ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறாங்க. அதுக்கு என்ன காரணம்? ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒரே கூட்டணியில் இருக்கிறாங்க.என்ன தப்பு பண்ணிட்டான் இந்த விஜய்.
மக்களுக்காக அரசியலுக்கு வந்தது ஒரு தப்பா? நல்லாட்சி கொடுக்கணும்னு நினைச்சது தப்பா? ஊழலைச் செய்யக் கூடாதுன்னு நினைச்சது தப்பா? லஞ்சமே வாங்கக் கூடாதுன்னு நினைச்சது தப்பா? பெண்களுக்குப் பாதுகாப்பு ஒழுங்கா இருக்கணும்னு நினைச்சது தப்பா? போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கணும்னு நினைச்சது தப்பா? சட்டம் ஒழுங்கைச் சரி செய்யணும்னு நினைச்சது தப்பா? விவசாயிகள் நல்லா இருக்கணும், மீனவர்கள் நல்லா இருக்கணும். உழைக்கிற மக்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சது தப்பா?ஆனா மக்களே நல்லா இருப்போம். நல்லா இருப்போம். எல்லாரும் நல்லா இருப்போம். எப்படி நல்லா இருப்போம். நல்லா இருப்போம். எல்லாரும் நல்லா இருப்போம்.
இந்த நேரத்துல ஒவ்வொரு வீட்டுல இருக்கிற என்னுடைய குட்டி நண்பா நண்பிகளுக்கு ஒரு request. உங்களுக்கு ஏதாவது ஒரு chocolate இல்ல ஏதாவது ஒரு kinder joy வேணும் அப்படின்னா அழுது அடம் புடிச்சு success பண்ணிடுவீங்க இல்ல. அந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது ஒரு dress வேணும்னா அழுது அடம் புடிச்சு success பண்ணிடுவீங்களா? அந்த மாதிரி உங்களுக்குப் புடிச்ச இந்த விஜய் மாமாவுக்காக. இந்த விஜய் மாமா ஜெயிக்கணும்ன்றதுக்காக நம்ம தமிழ்நாடு ஜெயிக்கணும்ன்றதுக்காக, உங்க வீட்டுல இருக்கிற உங்களோட அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா ஒவ்வொரு வீட்டுல இருக்கிற ஓட்டு போடுற வயசுல இருக்கிற அண்ணா, அக்கா எல்லார்கிட்டயும் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்லுங்க.suppose யாராவது ஓட்டு போடாம வீட்டுல உக்காந்துட்டு இருந்தாங்கன்னா அவங்க காதுலயே போய் அன்பா விசிலை ஊதி ஓட்டு போட ஓட வைங்க.
விசிலுக்கு ஓட்டு போடுற வரைக்கும் விடாதீங்க.இப்படி தான் இருக்கப் போகுது இந்தத் தேர்தல். இந்த கூட்டணி கணக்கெல்லாம் தூள் தூளா ஆயிடுச்சு. இந்த arithmetic mathematics எல்லாம் தூள் தூளா ஆயிடுச்சு.அடுத்து இந்த ஓட்டுக்கு காசு குடுத்து இந்தச் சத்தியம் வாங்குறது எல்லாம் பொய் சத்தியம். பொய்யர்கள் வாங்குற சத்தியம். அதெல்லாம் நம்பாதீங்க.அடுத்து இந்த பாஜக வந்துரும். பாஜக வந்துரும். இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் சுத்தமா எடுக்கப்படாது. இந்த பாசிச சக்திகள் எல்லாம் சுத்தமா எடுக்கப்படாது. மக்கள் already decide பண்ணிட்டாங்க. இந்த திமுகவும் வேணாம். மற்றும் பலரும் வேணாம். முக்கியமா இந்த பாஜக வேணவே வேணாம். already decided.அதனால இந்த survey கீர்வை எதையும் நம்பாதீங்க. மலையாய் உயர்ந்து நிக்கிற நம்ம மக்கள்.
மிகப்பெரிய விசில் அலையாய் இருக்கப்போற இந்த election. வாகை சூடும் வரலாறு திரும்பப்போகும் இந்த election. விஜய் விஜய் விஜய் விஜய் விஜய்.அதனால சார். ஸ்டாலின் சார். இந்தத் தேர்தல்ல இந்தத் தேர்தலுக்கு அப்புறம் நீங்கத் தோத்ததுக்கு அப்புறம் எப்படி எல்லாம் feel பண்ணப்போறீங்கன்னு கொஞ்சம் சொல்லவா? ஏண்டா இந்த விஜய்யா பாடா படுத்தணும்? ஏண்டா இந்த விஜய்யா வேதனைப்படுத்தணும்? ஏண்டா இந்த விஜயக்கு எதிரா சதி செஞ்சோம்? ஏண்டா இந்த விஜயக்கு எதிரா சூழ்ச்சி செஞ்சோம்? நெனச்சு நெனச்சு நெனச்சு feel பண்ணப் போறீங்க.மக்களே உங்களை feel பண்ண வைக்கப் போறாங்க. நான் என்ன கெடுதல் செஞ்சுட்டேன் உங்களுக்கு? நீங்கச் சாப்பிடுற சாப்பாட்டுல ஏதாவது மண்ணை கிண்ட அள்ளிப் போட்டேனா? உங்களோட ஆட்சியினுடைய லட்சணத்தை, உங்களோட ஊழலை, நீங்களும் மந்திரிகளும் அடிக்கிற கொள்ளையை மக்களுக்கு எடுத்துச் சொன்னேன்.
இதைச் சொல்லாம வேற என்னத்த சொல்லுவாங்க.இப்ப கரூர் விஷயத்துக்கு வரேன். கரூர்ல என்ன நடந்ததுன்னு அந்தக் கரூர் மக்களைக் கேட்டாலே புட்டு புட்டு புட்டு வைப்பாங்க. ஏன் மேல பழியை தூக்கி போடுறீங்க? என்னம்மா நாங்க அரசியலை பண்ண மாட்டோம். இந்த விஷயத்துல எல்லாம் நாங்க அரசியலை பண்ண மாட்டோம். video போட்டுட்டு போய்ச் சட்டசபையில் உக்காந்துகிட்டு ஏன் மேல பழியை தூக்கி போடுறீங்க?லேட்டா வந்துட்டாருன்னு Police குடுத்த time ல நாங்க இருந்தேன். நாமக்கல் இருந்து கரூர் வர வழியில இருந்த மக்கள் எல்லாரையும் நான் என்ன அம்போன்னு விட்டுட்டு வரச் சொல்றீங்களா? நாமக்கல் இருந்து கரூருக்கு நான் எப்படி வந்தேன்? எவ்வளவு நேரத்துல வந்தேன்? உலகமே live ல பாத்துகிட்டு இருந்தது. வாய் கூசாம ஏன் மேல பழியை தூக்கி போடுறீங்க?ஒரு மனசாட்சி இருந்தா வேணா. சரி நீங்கத் தான் எதுவுமே பண்ணல சார். அப்புறம் ஏன் சார் இருபது வருஷமா கரூர்ல மட்டுமே கரூர் பகுதியில மட்டுமே போட்டி போட்ட உங்களோட ஒரு அடிமையை, உங்களோட ஒரு அடிமையை ஏன் கோயம்புத்தூர் வரைக்கும், ஏன் கோயம்புத்தூர் வரைக்கும் ஓட வச்சீங்க?அதனால மக்களே! அத்தனை வலிகளையும் தாங்கிக்கிட்டு உங்களுக்காக நீதி கேட்க வந்த இந்த விஜய் இப்ப உங்களுக்கு நான் உங்ககிட்ட நீதி கேக்குறேன். நீங்கத் தயவு செஞ்சு எனக்கு நீதி வழங்கணும்.
எப்படி வழங்கணும்? நாள் நெனக்கி ஏப்ரல் இருபத்தி மூணாம் தேதி. சும்மா காலங்காத்தால பக்காவா ரெடி ஆயிட்டு voter ID card கையில எடுத்துக்கிட்டு வீட்டுல இருக்குற சாமி எல்லாம் நல்லா கும்பிட்டுட்டு உங்க பக்கத்து வீட்டுக்காரங்க, ஏத்து வீட்டுக்காரங்க, அங்கிள், ஆண்ட்டி எல்லாரையும் சந்தோஷமா கூட்டிட்டு முதால பூத்துல போய் நின்னு அந்த விசில் சின்னத்துக்கு நேரா இருக்குற அந்தப் பட்டனை ஒரு அழுத்து அழுத்துங்க.இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். இது உங்களுக்கான தேர்தல். அத்தனை வலிகளையும் தாங்கிக்கிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். உங்களுக்காக நன்றி கடன் செலுத்துறதுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை நான் ஏமாத்த மாட்டேன்.ஒரே ஒரு வாட்டி ஆசையா இருக்கு. ஒரே ஒரு வாட்டி repeat பண்ணிக்கிட்டமா கடைசியா. இந்த நாலு மணி போட்டி நாற்பது மணி போட்டியின் எத்தனை மணி போட்டியின் எத்தனை உருட்டு உருட்டினாலும் இங்க இரண்டு மணி போட்டி தான். ஒன்னு இன்னொன்னு. Yes. ஒன்னு TVK. இன்னொன்னு DMK.மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? மக்களை நேசிக்கிற உங்க விஜய் வேணுமா? அவ்வளவுதான் இந்த election.
அதனால உங்க புள்ளைக்கு, உங்க மகனுக்கு, உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க விஜய்க்கு. ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க. தயவு செஞ்சு விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க. இது ஒரு விசில் புரட்சி தேர்தல் ஆகணும்.மே நாலாம் தேதி அந்த result வர்ற day ரொம்ப special ஆன day அப்படின்னு ஸ்டாலின் சார் சொன்னாங்க. ஆமா ஆமா special ஆன day தான். அக்னி நட்சத்திரம் start ஆகுற day. கத்திரி வெயில் start ஆகுற day. அந்தக் கத்திரி வெயில் மண்டையை பொளக்கும். அது மக்களுக்கு ஆகவே ஆகாது. நம்பிக்கை உள்ள மக்கள் யாரும் நல்ல காரியங்களை அந்த அக்னி நட்சத்திரம் time ல செய்யவே மாட்டாங்க. சூரியன் பட்ட sun stroke வரும். எப்படா இந்தச் சூரியன் மறையும்? எப்படா இந்தச் சூரியன் ஒளியும். குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் அந்தச் சூரியனை வெறுத்து ஒதுக்குவாங்க. அது தான் indication. அது தான் அந்த result க்கான indication.ஓம் சக்தி பராசக்தி. திமுக ஒரு தீய சக்தி.
அந்தத் தீய சக்தியை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஓட ஓட ஓட விரட்டி full stop வைக்கப்போற நாள் May fourth.நம்ம ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிஷம் என்ன செய்யப்போறேன்னு சொல்றேன். number oneதமிழ்நாட்டுல இருக்கிற எல்லா குடும்பங்களுக்கும் உறுதுணையா இருக்கத்தான் நாம அரசியலுக்கு வந்தோம். அந்த எண்ணத்தோட வெளிப்பாடுதான் நம்மளோட ஒவ்வொரு குடும்பத்திற்குமான உத்திரவாதம். இருநூறு unit கட்டணமில்லா மின்சாரம்.நம்பர் two. என்னோட பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சிங்க எல்லாரும் தமிழ்நாட்டுல எல்லா இடத்துக்கும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கட்டணம் இல்லாமலே போகலாம்.நம்பர் three சட்டம் ஒழுங்கு சரியா ரொம்ப strict ஆ நிலைநாட்டியே தீருவோம். அதோட வெளிப்பாடா பெண்கள் பாதுகாப்புக்கான மிகக் கடுமையான சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும்.அது மட்டும் இல்ல. நம்ம இளைஞர்களின் பாதுகாப்புக்காகப் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்புக்கான சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும்.
District Headquarters that is the Collectors office of தமிழ்நாடு to meet the public of that particular district and receive their petitions. இத நான் regular ஆ பண்ணுவேன்.இதெல்லாம் செய்வோம். இதோட நாம சொன்னதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நாம ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் செஞ்சு காட்டுவோம். சொல்லாததையும் செய்வோம். அது வேற விஷயம். ஆனா இப்போ நம்மளால செய்யறதை செய்ய முடிஞ்சதை மட்டும் இப்போதைக்கு நான் சொல்லி இருக்கிறேன்.
மக்களே! நாள் நினைக்கு ஏப்ரல் இருபத்தி மூணாம் தேதி. அன்னைக்கு ஒரு நாள் மட்டும் இந்த விஜய் சொல்றதை கேளுங்க. கேட்டுட்டு தயவு செஞ்சு விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க. அடுத்து வர அஞ்சு வருஷம். அதென்ன அஞ்சு வருஷம் அடுத்து வர எல்லா வருஷமும் நீங்கச் சொல்றதை நான் கேக்குறேன்.
நீங்கச் சொல்றதை இந்த விஜய் கேட்பான்.Confident ஆருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம்.மீண்டும் சந்திக்கும் வரை. மீண்டும் சந்திக்கும் வரை. நன்றி வணக்கம்.”விஜய்யின் இந்த உணர்ச்சிபூர்வமான உரை, தவெக செயல் வீரர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் உணர்ச்சி அலையையும் ஏற்படுத்தியது. தேர்தல் பரப்புரையின் இறுதி நாளில் அவர் வெளியிட்ட இந்த உரை, தவெகவின் வெற்றிக்கான உறுதியை மீண்டும் வலியுறுத்தியது.
