திருவாரூர் தொகுதியிலேயே திமுக வெற்றி பெறுவது கடினம்...!தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 

தேர்தல் தேதி அறிவித்த பிறகே தேமுதிக தனித்துப் போட்டியா, இல்லை கூட்டணியா என முடிவு கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார். புயல் போன்ற

தேர்தலை கண்டு அதிமுக, திமுக அஞ்சுகின்றது  என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,

தேர்தல் தேதி அறிவித்த பிறகே தேமுதிக தனித்துப் போட்டியா, இல்லை கூட்டணியா என முடிவு கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார். புயல் போன்ற காரணங்களை கூறி தேர்தலுக்கு ஆளுங்கட்சி முட்டுக்கட்டை போட்டு வருகிறது.அதேபோல் தேர்தலை கண்டு அதிமுக, திமுக அஞ்சுகின்றது. 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது. ஏற்கனவே மழையை காரணம் காட்டினார்கள், இப்போது புயலை காரணம் காட்டுவர். திருவாரூர் தொகுதியிலேயே திமுக வெற்றி பெறுவது கடினம் என்றும்  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.