கூட்டணி அழைப்பு கொடுத்த எடப்பாடி பழனிசாமி – பதிலடி கொடுத்த திருமாவளவன்!

நிறைவேறாது என தெரிந்தும் திரும்பத் திரும்ப அழைப்பது வேடிக்கையாக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy thol thirumavalavan

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை, திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணையுமாறு அழைப்பு விடுத்தார்.

ஜூலை 16, 2025 அன்று சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஈபிஎஸ், திமுக அரசு தனது கூட்டணிக் கட்சிகளை அடக்கி ஒடுக்குவதாகவும், விசிக-வின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். “விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் திமுகவை விட்டு வெளியேறி, எங்களது கூட்டணியில் இணைய வேண்டும். எங்களது கூட்டணி அவர்களுக்கு உறுதியான ஆதரவையும், மரியாதையையும் வழங்கும்,” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த அழைப்புக்கு, விசிக தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக பதிலடி கொடுத்தார். ஜூலை 17, 2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஈபிஎஸ்-இன் இந்த அழைப்பு, திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவை உருவாக்கும் நோக்கத்துடன் விடுக்கப்பட்டது, நிறைவேறாது என தெரிந்தும் திரும்பத்திரும்ப அழைப்பது வேடிக்கையாக உள்ளது.

விசிக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் (எஸ்பிஏ) உறுதியாக இருப்பதாகவும், பாஜக அல்லது பாமக உடனான எந்த கூட்டணியையும் ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். எப்போதும் பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன். சமத்துவத்துக்கு எதிரானது பாஜக. திமுக கூட்டணியில் குழப்பத்தையும் விரிசலையும் ஏற்படுத்த பார்க்கிறது அவர்களது கொள்கை அவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எங்கள் கொள்கை எங்களுக்கு முக்கியம் எனவே, எப்போதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன்” எனவும் திருமாவளவன் பேசி பதில் அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்