கரூர் :கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்கள் வழியே வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.
இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ”கரூரில் நடந்தது பெரும் துயரம், இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக் கூடாத துயரம் சமூக வலைதளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம். உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம் தமிழ் உறவுகள், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான கருத்துகளை பரப்புவதை தவிருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
unknown nodeஇந்நிலையில், அவதுாறு பரப்பக்கூடாது என்று வீடியோ அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ”என்ன அவதூறு பரவியது? உங்கள் கட்சிக்காரர்கள், ‘தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே அந்த அவதூறா?
உங்கள் அரசின் காவல்துறை பிரசாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது இவை எல்லாம் வதந்தியா?
பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன? உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மலர் மாட்டிக் கொண்டாரே – அதுவா?. கரூர் துயரத்திற்கு பதிலளிக்காமல் அவதூறு குறித்து பேசுகிறார். மாணவர் சங்கம் என்ற பெயரில் திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
பிரசாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் நடந்த குளறுபடிகள் அவதூறா? கள்ளச்சாராய மரணத்திற்கு கலங்காத கண்கள் கரூருக்கு கலங்குகிறதா? உண்மை நிலை தெரிய CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டு” என அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பினார்.
unknown node