ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்தால் கூட அதிமுக கூட்டணி வெற்றி பெறாது -இளங்கோவன் பரபரப்பு தகவல்

This news gives information about Even if the 5000 rupees will be donated, the AIADMK will not succeed

அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1,500 கிடைக்கும் என அமைச்சர்  ஜெயக்குமார் கூறினார்.

ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்தால் கூட அதிமுக கூட்டணி வெற்றி பெறாது என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ் -மதிமுக – விசிக – மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.

அதேபோல்  அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க-தே.மு.தி.க- த.மா.கா-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும்  மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டது.

unknown node

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தார்.அதில் நதிநீர் இணைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. இரட்டை இலைக்கு, அதிமுகவுக்கு வாக்களித்தால் மாதம் ரூ.1,500 கிடைக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால் அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1,500 கிடைக்கும் என ஜெயக்குமார் கூறியதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுகசார்பில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

unknown node

இந்நிலையில் இன்று தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஜரானார்.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்  ஈவிகேஎஸ் இளங்கோவன்.அப்போது செய்தியாளர்கள் திமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1,500 கிடைக்கும் என ஜெயக்குமார் கூறியது குறித்து உங்கள் கருத்து என்ன ?என்ற கேள்வி கேட்டனர்.இதற்கு பதிலளித்த இளங்கோவன், ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்தால் கூட அதிமுக கூட்டணி வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.