நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளை ஏந்திச் சென்று ரசிகர்கள் அஞ்சலி...!

At the funeral of actor Vivek, the public and his fans are all going with saplings and paying tribute.

நடிகர் விவேக்கின் இறுதி  ஊர்வலத்தில், பொதுமக்கள், அவரது ரசிகர்கள் அனைவரும் மரக்கன்றுகளுடன் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நடிகர் விவேக்கின் உடல், காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மயானத்தில், 78 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அவரது இறுதி  ஊர்வலத்தில், பொதுமக்கள், அவரது ரசிகர்கள் அனைவரும் மரக்கன்றுகளுடன் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், இவரது பூத உடலுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவரது இறுதி  கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.