மதுரை மாவட்டம் அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை இன்று காலை வழக்கம் போல இயங்கி உள்ளது. 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டு கட்டடம் தரைமட்டமாகியுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விவரம் அறிந்து மதுரை, திருமங்கலம் பகுதி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் கட்டடம் தரைமட்டமாகியுள்ளது. சில உடல்கள் சிதறி கிடந்து உள்ளது. அதில் தற்போது வரை 2 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில உடல்கள் இருக்கிறது. இனி அவர்கள் அடையாளம் காணப்படுவர் என கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.