கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
unknown nodeதமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை ஒரு வழி செய்தது.குறிப்பாக இயற்கை வளங்கள் செழிப்பாக உள்ள மாவட்டங்கள் சிதைந்து கிடக்கிறது.தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் சேதங்கள் பல ஆகும்.
unknown nodeஇந்நிலையில் திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும்.அதேபோல் நிவாரண நிதியாக திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் 1 மாத ஊதியமும் அளிக்கப்படும் என்றும் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.