டெல்லி மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களாக டெல்லியில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு பல கோடி மதிப்பிலான போதை பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். அதே போல குறிப்பிட்ட 2 குடோன்களில் இருந்து சுமார் 50 கிலோ அளவிளான போதைப்பொருட்களை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
Read More –அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ஊழல் வழக்கு.! பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் உத்தரவு.!
அந்த போதை பொருள் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என்றும், இந்த போதை பொருளானது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு கடத்த இருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் அந்த கடத்தலில் முதலில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை போதைப்பொருள் கடத்தல் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Read More –மகளிர் உரிமை தொகைத் தொகை பறிபோகும்… கனிமொழி எம்.பி பரபரப்பு பேச்சு.!
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் என்பவர் இந்த கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது. இந்த செய்தி வந்தவுடன், திமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஜாபர் சாதிக் நீக்கப்பட்டதாக திமுக தலைமை நேற்று அறிவித்தது. ஜாபர் சாதிக் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை பொறுப்பாளராக இருந்து வந்தார் என்பதும் திரைப்படங்களை தயாரித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More –ஹரியானாவில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மாநிலத் தலைவர் சுட்டுக்கொலை
இந்த வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கியது முதல் ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இன்று டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜாராக கூறப்பட்டு இருந்த நிலையில் இன்று ஆஜராகாத காரணத்தால் தற்போது மைலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் ஒட்டியுள்ளனர்.
