வேதியியல் ஆய்வகத்தில் வாயுக் கசிவு..! இந்த தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை..!

சென்னை திருவொற்றியூரில் இன்று வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Gas leaked in Private School

சென்னை :திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியான விக்டரி பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால், 35 மாணவ/மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர், மயக்கமடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து,  அங்கு மீதமிருந்த மாணவ, மாணவிகள் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அங்கு பரபரப்பான சூழ்நிஇலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இதன் காரணமாக, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி விசாரணை மேற் கொண்டு வந்தார். பின், அப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், வாயுக் கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், மாணவர்கள் மயக்கமடைந்ததை தொடர்ந்து பள்ளியில் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு திருவொற்றியூரில் அமைந்துள்ள விக்டரி தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.