முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது.குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.அதேபோல் குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.
ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இறுதிகெடுவாக சரவணனுக்கு சம்மன் அனுப்பியது சிபிஐ.ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாமல் இருந்தார்.
unknown nodeஇந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் நேற்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது.குட்கா வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து சிபிஐ நடவடிக்கை எடுத்தது.நேற்று காலை குட்கா முறைகேடு குறித்த விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.சம்மனை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் ரமணா.சுமார் 9 மணி நேரமாக விசாரணை நடைப்பெற்றது. 9 மணி நேர சிபிஐ விசாரணைக்குப்பின் முன்னாள் அமைச்சர் ரமணா புறப்பட்டார்.அதேபோல் குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா இன்று மீண்டும் ஆஜராக சிபிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது.