குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
unknown nodeகுட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.அதேபோல் குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இறுதிகெடுவாக சரவணனுக்கு சம்மன் அனுப்பியது சிபிஐ.