“நடுரோட்டில் விட்டுட்டு போய்டுவாரு” – விஜய் குறித்து முன்னாள் மேலாளர் ஷாக்கிங் பேட்டி!

விஜய் ஒரு துரோகி, செங்கோட்டையன் ஒரு ஊழல்வாதி எனவும் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :திமுகவில் சமீபத்தில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளரும், திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான பி.டி.செல்வகுமார், தவெக தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். “விஜய் ஒரு துரோகி, செங்கோட்டையன் ஒரு ஊழல்வாதி” என்று அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் விஜய்யை நம்பி பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்றும், அவர் தேர்தலில் தோற்றால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடுவார் என்றும்குற்றச்சாட்டியுள்ளார்.

பி.டி.செல்வகுமார் மேலும் கூறுகையில், “விஜய்க்கு தோல்வி பிடிக்காது. தோற்ற படத்தின் தயாரிப்பாளர் வந்தால் வீட்டிற்குள் சேர்க்க மாட்டார். நான் இல்லை என்று சொல்லுங்கள் என ஒளிந்து நின்று பார்ப்பார்” என்று விஜய்யின் குணத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். “பேசாமல் இருப்பது மிகப் பெரிய குணம்” என்றும், ஆனால் விஜய் நிஜத்தில் எதுவும் செய்ய மாட்டார் என்றும் அவர் தாக்கியுள்ளார்.இந்த பேட்டி தவெகவுக்கு எதிரான பெரும் விமர்சன அலையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் முன்னாள் மேலாளரே இப்படி பேசுவது கட்சியினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளையும் ஊழல்வாதிகள் என்று சாடியுள்ளது கட்சியின் உள் ஒற்றுமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.திமுகவில் இணைந்த பிறகு பி.டி.செல்வகுமார் தவெகவை தொடர்ந்து தாக்கி வருகிறார். இது திமுக – தவெக இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் தவெகவின் இளைஞர் ஆதரவை பாதிக்குமா என்பது இப்போது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.ஒட்டுமொத்தமாக, பி.டி.செல்வகுமாரின் இந்த பேட்டி தவெக தலைவர் விஜய் மீதான மிகக் கடுமையான தனிப்பட்ட தாக்குதலாக அமைந்துள்ளது.

“துரோகி”, “தோல்வியை ஏற்க மாட்டார்”, “வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார்” போன்ற குற்றச்சாட்டுகள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தவெக தரப்பிலிருந்து இதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்த விவகாரம் தேர்தல் களத்தில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.