“இந்த பிரச்னையால்தான் நான் முதலமைச்சராக முன்வந்தேன்” – சசிகலா விளக்கம்!

எனக்கு 39 வருடம் அரசியல் அனுபவம் உள்ளது. இந்த தருணத்திற்காக 9 வருடம் காத்திருந்தேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

sasikala

சென்னை :பசும்பொன்னில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக வி.கே.சசிகலா ஏற்கனவே அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை கமுதி பசும்பொன் அருகே உள்ள கோட்டைமேட்டில் சசிகலா ஆதரவாளர்கள் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சசிகலா உரையாற்றினார்.கூட்டத்தில் பேசிய சசிகலா, “எனக்கு 39 வருடம் அரசியல் அனுபவம் உள்ளது. இந்த தருணத்திற்காக 9 வருடம் காத்திருந்தேன். இது எங்களுக்கான தருணம். ஏழைகளுக்கான கொடியாக காலகாலத்துக்கும் இருக்கும்” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.

தனது நீண்ட அரசியல் பயணத்தில் ஏழை எளிய மக்களுக்காக உழைத்ததை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய சூழலை “எங்களுக்கான தருணம்” என்று வர்ணித்தார்.எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சசிகலா, “பன்னீர்செல்வத்தை வரச் சொல்லி அமைச்சர்களா இருக்கிறவங்க அத்தனை பேரையும் வரச் சொல்லி, போயஸ் கார்டன் வீட்டுக்கு எல்லாரையும் ஒண்ணா உக்கார வச்சு என்ன பன்னீர்செல்வம் செய்றாரு சொல்லுங்க?” என்று கேள்வி எழுப்பினார்.

அம்மா இருக்கும்போதே ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியை மீண்டும் நியமிக்க முயன்றதை எதிர்த்ததாகவும், அதனால் பிரச்சினை உருவானதாகவும் அவர் விளக்கினார்.மேலும் பேசிய சசிகலா, “அம்மா இருக்கும்போதே போலீஸ் டிபார்ட்மெண்ட்ல கட்சிக்காரங்க தலையீடு இருக்கக்கூடாது என்று நடத்தினாங்க. அதனாலதான் திருட்டு இல்ல, பிரச்சனைகள் இல்லாம இருந்தது. மந்திரிகளுக்கு அது வேலை இல்ல. போலீஸ் ஸ்டேஷன்ல யாரை போட்டா உங்களுக்கு என்னப்பாங்க?” என்று கேள்வி எழுப்பினார். பன்னீர்செல்வம் திடீரென அம்மா சமாதியில் உட்கார்ந்து தர்ம உத்திரவு விட்டது யாரோ சொல்லியதால் நடந்தது என்றும் குறிப்பிட்டார்.

சசிகலா தனது உரையில், “அவருக்கே தெரியும். எல்லாரையும் வச்சு ஒண்ணா வச்சு தான் பேசுறேன். என்ன ஆயிடுச்சு? திடீர்னு போயி அம்மா சமாதியில் போய் உக்காந்துட்டாரு. போய் உக்காந்து தர்ம உத்திரவு விட்டாரு. அது யாரோ சொல்லியிருக்காங்க. எல்லாருக்கும் புரியும். எதோ கேட்டு அவரு எதோ பண்ணிட்டாரு. கடைசியா அதே இன்னை வரைக்கும் அவருக்குச் சிக்கலாயிடுச்சு” என்று பேசினார்.

இந்த பேச்சு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒட்டுமொத்தமாக, பசும்பொன்னில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்த சசிகலா, கமுதி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

போயஸ் கார்டன் வீட்டில் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து பேசியதை நினைவுகூர்ந்த அவர், பன்னீர்செல்வம் மீதான நெருக்கடி, அம்மாவின் காலத்தில் போலீஸ் துறையில் தலையீடு இல்லாமல் இருந்தது ஆகியவற்றை விளக்கினார். இந்த பேச்சு அதிமுகவில் உள்ள ஜெயலலிதா ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலுக்கு முன்பாக இத்தகைய கருத்துகள் மேலும் பிளவுகளை ஏற்படுத்தலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.