ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் அனைத்து வகையான கேள்விகளுக்கும் தெரிந்த வரை பதிலளித்துள்ளேன் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுக சாமி ஆணையம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பியது. டிசம்பர் 14ம் தேதி அதாவது இன்று நேரில் ஆஜராகி விளக்கம் தர ராதாகிருஷ்னனுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.இந்நிலையில் ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார்.இதன் பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.அனைத்து வகையான கேள்விகளுக்கும் தெரிந்த வரை பதிலளித்துள்ளேன். மீண்டும் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வருவதாக உறுதியளித்துள்ளேன் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.