"ஸ்டாலினோடு மோதியவன் நான்" முன்னாள் அமைச்சர் அதிரடி ..!!

"ஸ்டாலினோடு மோதியவன் நான்" முன்னாள் அமைச்சர் அதிரடி ..!!

“ஸ்டாலினோடு நேருக்கு நேர் மோதியவன் நான்” -முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அதிரடி

தஞ்சாவூர் ,

தஞ்சாவூரில் நடந்த  அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், `ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் ஊழல் என பேசி குற்றம் சாட்டுகிறார். நான் சட்டமன்றத்தில் ஸ்டாலினோடு பல முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறேன். ஊழலை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை’ என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

unknown node

தஞ்சாவூரில் அதிமுக சார்பில் அண்ணாவின்  110 -வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

unknown node

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் , “ராஜபக்‌ஷே சொல்கிறார் இலங்கையில் நடந்த போருக்கு உதவி செய்தது இந்திய அரசுதான் என்று. இந்திய அரசு என்றால் அப்போது கூட்டணியோடு ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தான். தமிழ் இனத்திற்கு துரோகம் செய்துவிட்டு இப்போது வேஷமிடுகிறார்கள் திமுகவினர்.

unknown node

ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் ஊழல் ஊழல் என பேசி குற்றம் சாட்டுகிறார். நான் சட்டமன்றத்தில் ஸ்டாலினோடு பல முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறேன். அதனால் சொல்கிறேன் மொழி, தமிழ் இனம், குடும்ப அரசியல் இப்படி எதை பற்றியும் பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. எல்லோரும் நினைக்கிறார்கள் எப்படியாவது அதிமுகவை கைபற்றி விடலாம் என்று. ஆனால் அது முடியாது. தினகரன், ஸ்டாலின், ரஜினி, கமல் என யாராக இருந்தாலும் அதிமுகவை கைபற்ற முடியாது. ஜெயலலிதா சொன்னது போல் நூறு ஆண்டு காலம் இந்த கட்சி எழுச்சியோடு இருக்கும்” என்று முன்னாள் அமைச்சர் பேசினார்.

DINASUVADU