மதுரை :பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செப்டம்பர் 20, 2025 அன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணிக்கு அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை சேர்த்துக்கொள்வோம் என்று அறிவித்தார்.
“எண்டிஏ கூட்டணிக்கு வந்தால் ஓபிஎஸ், டிடிவி தினகரனை சேர்த்துக்கொள்வோம். அதிமுக உள் கட்சி பிரச்சினைக்கு நாங்கள் தலையிட முடியாது,” என்று அவர் தெரிவித்தார். மேலும், “பாஜகவின் 11 ஆண்டு ஆட்சியில் ஒரு மீனவரும் சுட்டுக் கொல்லப்படவில்லை,” என்று திமுக அரசை விமர்சித்தார். இந்த அறிவிப்பு, அதிமுக உள் பிளவுக்கு NDA-வின் ஆதரவை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
நயினார் நாகேந்திரன், அதிமுகவின் உள் பிரச்சினைகளில் பாஜக தலையிடாது என்று தெளிவுபடுத்தினார். மேலும், பாஜகவின் 11 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மீனவர்கள் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை எனவும், இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் மீனவர்கள் மீது அக்கறையில்லாத பாஜக என பரப்புரையில் விஜய் பேசியதற்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.
பேசியதை தொடர்ந்து கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழாவில், நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். “தீப்பெட்டி தொழில் தமிழகத்தின் பாரம்பரியமாகும். இதன் நூற்றாண்டு விழா, தொழிலாளர்களின் உழைப்பை பாராட்டுகிறது,” என்று அவர் கூறினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் கிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
