முதலமைச்சரின் பயணம் மக்களின் கோபத்தை அதிகப்படுத்தும் வண்ணமாகவே உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், புயல் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர், அமைச்சர்கள் தங்கி சேதங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர் . புயல் பாதித்த பகுதிக்கு முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக ஏன் செல்லவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் இருப்பதற்கான காரணத்தை முதலமைச்சர் பழனிசாமி விளக்க வேண்டும் .பாதிக்கப்பட்ட மக்களை மழை காரணமாக முதலமைச்சர் சந்திக்க முடியவில்லை என்றால் தங்கி சந்திக்க வேண்டியது தானே என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.