பாஜக ஆட்சியில் தொழிலதிபர்கள் தான் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில்,தேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு .திமுக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் விதத்தில் தேசம் காப்போம் மாநாடு அமையும்.பாஜக ஆட்சியில் தொழிலதிபர்கள் தான் வளர்ச்சி அடைந்துள்ளனர். ஹெச்.ராஜா போன்றவர்களுக்கு தேசம் காப்போம் மாநாடு ஒரு பாடம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.