பெண்கள் கூலி இழப்பை தவிர்க்க தங்களின் கருப்பையை அகற்றிக் கொள்கின்றனர் என்று மகாராஷ்டிரா அமைச்சர் நிதித் ராவுத் கூறினார்.
பெண் தொழிலாளிகள் கருப்பையை அகற்றி கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அமைச்சர் நிதித் ராவுத் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு ஒரு கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தில், மாநிலத்தில் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்யும் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கூலி இழப்பை தவிர்க்க தங்களின் கருப்பையை அகற்றிக் கொள்கின்றனர்.எனவே மாதவிடாய் காலமான 4 நாட்களுக்கும் கூலி வழங்க சர்க்கரை ஆலைகள் முன்வந்தால் அவர்கள் இந்த மாதிரியான செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.இவர் இவ்வாறு கூறியது நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
unknown node