கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் வரவில்லை என கூறப்படுவது தவறானது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் வரவில்லை என கூறப்படுவது தவறானது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கி இருக்க உத்தரவிடப்பட்டு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் முன்கூட்டியே சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.