ஜெ.மரணம் தொடர்பான விசாரணை: துணை முதல்வர்,அமைச்சர்,மக்களவை துணை சபாநாயகருக்கு நேரில் ஆஜராக சம்மன்...!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி  23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி  23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.

unknown node

அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி  23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.அதேபோல்   அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும், தம்பிதுரை எம்பி ஜனவரி  22 ஆம் தேதியும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.