"ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்" ...!முதலமைச்சர் பழனிசாமி  வேண்டுகோள்

"ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்"  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வேண்டுகோள் விடுத்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை

“ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்”  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அந்த அமைப்பினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் சென்னையில் இன்று ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெறும்  என்று அறிவித்தனர்.இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.அதில்  “ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்” .புயல் நிவாரண பணிகளுக்கு தொய்வு ஏற்படாமல் இருக்க அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்”  என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.